நாட்டுக்கு தேவை ஓர் மன்னரின் சேவையல்ல, மெய்யான மனிதரின் சேவை என புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியிலிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதலாவது உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் வரையறையற்ற அதிகாரங்கள் நாடாளுமன்றம், நீதிமன்றம், சுயாதீன ஆணைக்குழுக்களிடம் ஒப்படைக்கப்படும்.
விவசாய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சுதந்திரமான அரச சேவையொன்று, பக்கச்சார்பற்ற பொலிஸ் சேவையொன்று உருவாக்கப்படும்.
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ள தொழிலாளர்ளின் பொருளாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டின் அபிவிருத்தியில் காணப்படும் ஊழல், மோசடிகள் முறைகேடுகள் இல்லாதொழிக்கப்படும்.
ஜனாதிபதி தேர்தலுக்காக நான் போட்டியிட்ட முதலாவதும் இறுதியுமான சந்தர்ப்பம் இதுவாகும்.
தேர்தல் வெற்றியை அனைவரும் அமைதியான முறையில் கொண்டாட வேண்டும்.
பௌத்த நாடு என்ற வகையில் பௌத்த மதத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்ய சகல வழி வகைகளும் உருவாக்கப்படும்.
அதேபோன்று இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க மதங்களை மேம்படுத்தவும் அவர்களின் மத உரிமைகளை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து இன சமூகங்களினதும் உரிமைகளை உறுதி செய்து சகோதரத்துவத்துடன் வாழ நடவடிக்கை எடுக்கப்படும் என தனது உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

 
Top