சுகாதார சுதேச வைத்தியத் துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ள  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ ஹசன் அலிக்கு  இன்று நிந்தவூரில் பெருவரவேற்பு அளிக்கப்பட்டது. 
இராஜாங்க அமைச்சர் ஹசன் அலியுடன் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம். பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர்  எம்.ஏ.எம் தாகிர் ஆகியோரும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

 வரவேற்பு ஊர்வலத்தின் இறுதியில் நிந்தவூர் ஜூம்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற விசேட துஆ பிராத்தனையிலும் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி கலந்து கொண்டதுடன் நிந்தவூர் அஸ்ரப் சதுக்கத்தில் வவேற்பு விழாப் பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. 

நிந்தவூர் பிதேசசபைத் தவிசாளர் எம்.ஏ.எம் தாகிர் தலமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு விழாப் பொதுக்கூட்டத்தில் நகர அபிவிருத்தி நீர் வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கட்சி உயர் பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

 
Top