(பீ .எம்.எம்.ஏ.காதர்)


மாறிவரும் உலகமயமாக்களில் ஊடக ஒழுக்க கோவை எனும் தலைப்பிலான சர்வதேச மாநாடு ஒன்று கொழும்பில் இன்று (27.1.2015) செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமானது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டையிலுள்ள கிங்கஸ் பெறி ஹோட்டலில் இன்று காலை ஆரம்பமான இந்த மாநாடு நாளை புதன்கிழமை மாலை நிறைவடையவுள்ளது.
இந்த மாநாட்டில் அமெரிக்கா மற்றும் இந்தியா பாகிஸ்தான், மியன்மார், நேபால் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் இலங்கையில் இருந்தும் சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் உலகமயமாக்களில் ஊடக ஒழுக்க கோவை மற்றும் முரன்பாட்டுச் சூழலில் ஊடகங்களின் சம நிலை போன்ற பல் வேறு தலைப்புக்களில் கருத்துரைகளும் கலந்துரையாடல்களும் இடம் பெறுகின்றன.

இந்த மாநாட்டில் காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் அவர்களும் பங்கு பற்றியுள்ளார்.


கருத்துரையிடுக

 
Top