எமது நன்மதிப்பைப் பெற்ற கணக்காளர் றசீட் அவர்கள் நலன்பெற நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம் என கல்முனை மாநகர சபை உறுப்பினரும், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று (01) வியாழக்கிழமை கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கல்முனை மாநகர சபைக்குச் சொந்தமான பிக்கப் வாகனம் கந்தளாயில் விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த ிரதம கணக்காளர் எச்.எம்.எம்.றசீட் படுகாயமடைந்து மேலதிகசிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.
கை, கால், நெற்றி என்பவற்றில் பல காயங்கள் தெரிவதாகவும், விபத்து நடைபெற்று 24மணி நேரம் கழிந்த பின்னும் அவர் சுயநினைவிற்கு திரும்பவில்லை என்ற செய்தியானது பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கல்முனை மாநகர சபையின் 2015ம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தினை மிகச் சிறப்பாகவும், வெளிப்படைத் தன்மை கொண்டதுமாகவும் தயாரித்திருந்த கணக்காளருக்கு கடந்த 30.12.2014 அன்று இடம்பெற்ற மாதாந்த அமைர்வில் சபையின் போது வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
கணக்காய்வு திணக்களத்தில் பிரதமராக கடமையாற்றிய றசீட் அவர்கள் கல்முனை மாநகர சபையில் கணக்காளராக தனது கடமையினை பொறுப்பேற்றதிலிருந்து குறித்த பிரிவின் நிர்வாகத்தினை சீர் செய்து மிகவும் சிறப்பாக வழிநடாத்திவருகின்றார்.
சாந்தமான குணமும், மிகவும் நேர்மையான நடத்தையும் கொண்ட றசீட் அவர்கள் விரைவில் குணமடைந்து வழமைக்கு திரும்பவேண்டும் என எல்லாம்வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன்.
கல்முனை மாநகர சபையின் முதல், பிரதி முதல்வர், உறுப்பினர்கள், அவருடன் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களதும் நன்மதிப்பைப் பெற்ற கணக்காளர் றசீட் அவர்கள் நலன்பெற நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்திக்குமாறு  அன்பாக கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

கருத்துரையிடுக

 
Top