சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை அறிவிப்புச் செய்யும் உத்தியோகபூர்வ நிகழ்வு லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இன்று (05.01.2015) மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் விஷேட ஆலோசகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் முயற்சியினாலேயே இந்நகர சபைக்கான அறிவிப்பினை உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சினால் இன்று வெளியிடப்படவுள்ளது.
கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் விஷேட ஆலோசகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்நகர சபைக்கான உத்தியோகபூர்வ வர்த்தகமானி அறிவித்தலினை கையளித்து வெளியிட்டு வைக்கவுள்ளார்.
இந்நிகழ்வு சாய்ந்தமருது மக்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்;த நிகழ்வாகும். எனவே இந்நிகழ்வுக்கு அனைவரும் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top