ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது. சுமார் ஒன்றரை கோடி வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றுக்கொண்டிருந்தனர்.12314 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களித்திருந்தனர். தற்போது வாக்குப் பெட்டிகள்  வாக்கெண்ணும்  நிலையங்களுக்கு எடுத்து செல்லப் படுகின்றன 
நாட்டின் பல பாகங்களிலும் அதிகளவான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சராசரியாக 65 வீதம் தொடக்கம் 70 வரை  வாக்களித்துள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.சில மாவட்டங்களில் 70 வீதம் வரையிலானவர்கள் வாக்களித்துள்ளனர்.
நாடு முழுவதிலும் இன்றைய தினம் சீரான காலநிலை நிலவியமை குறிப்பிடத்தக்கது.எந்தவொரு பகுதியிலும் மிகவும் மோசமான காலநிலை நிலவவில்லை.
தற்போது வாக்கு பெட்டிகள் வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இலங்கையின் 7 வது ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிக்கும் தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் பிரதான வாக்கெண்ணும் நிலையமான சேனநாயக்க கல்லூரியில் தற்போது வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்படுகின்றன.
தபால் மூல வாக்குகளின் முடிவு இன்று இரவு 11:00 மணிக்கு வெளி யிடப் படும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார் .


கருத்துரையிடுக

 
Top