ஜனாதிபதி அவர்களின் நேரடிப் பணிப்புரைக்கமைய கல்முனைப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உலருணவு  நிவாரணம் வழங்கும் பணிகள் இன்று இடம் பெற்றது.

கல்முனை தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் தலைமையில் இந்த நிவாரணம் வழங்கும் பணி நடை பெற்றது.

கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக கல்முனை பிரதேசத்தில் பல குடும்பங்கள் பாதிக்கப் பட்டன. இன்று சுமார் 400 குடும்பங்களுக்கு தலா 1500 ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள்  வழங்கப் பட்டன. 


கருத்துரையிடுக

 
Top