ஜனாதிபதி மைத்திரியின் நல்லாட்சியில் இன்று பாராளுமன்றதுக்கு கொண்டுவரப் பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்தில் 13 அத்தியாவசியப் பொருட்களுக்கான  விலைக் குறைப்பயடுத்து  கல்முனை மக்களால் ஏற்பாடு செய்யப் பட்ட துஆ பிரார்த்தனையும் பால் சோறு வழங்கும் நிகழ்வும்  கல்முனைக் குடி ஆட்டோ பஸார்  சந்தியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகம் முன்பாக இடம் பெற்றது.

கல்முனை ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் எஸ்.எல்.முஹீஸ் தலைமையில்  இடம் பெற்ற நிகழ்வில் மக்கள் பலர் கலந்து கொண்டு  மகிழ்ச்சியை தெரிவித்ததுடன் ஜனாதிபதிக்கும் , நாட்டு மக்களுக்கும் விசேட துஆ பிரார்த்தனையும் நிகழ்த்தப் பட்டது.கருத்துரையிடுக

 
Top