பிரான்ஸ் வாழ் தமிழ் உறவுகளின் நிதி உதவியில் எஸ். ரி.ஏ சொலிடரிட்டி
பவுண்டேசன் அமைப்புக்கூடாக  வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான
நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்டம் மயில்வாகனபுரம்
பாடசாலை கட்டிடத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் திரு. எஸ்.கோடிஸ்வரன் அவர்களும், மயில்வாகனபுரம்
 விநாயகர் ஆலய பூசகர் திரு.சு.சற்குணம் அவர்களும், கிராம அபிவிருத்திச் சங்க
தலைவர் திரு. பு.சிவகுமார் அவர்களும், நிறுவன வடகிழக்கு திட்ட இணைப்பாளர்
திரு.வி. வாமதேவன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்து
கொண்டனர்.

இதன்படி மயில்வாகனபுரம் கிராமத்தில் வெள்ளம் காரணமாக பாடசாலைக்கு
இடம்பெயர்ந்து வெள்ளம் வடிய வீடுகளுக்கு சென்ற 100 குடும்பங்களுக்கு தலா
1,500/- ரூபா பெறுமதியான அரிசி, பால்மா, பருப்பு, சோயமீற், நுடில்ஸ், சீனி,
பிஸ்கட் மற்றும் பாய் போன்ற நிவாரணப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு அதிபர் அவர்கள் பேசுகையில் இந்த உதவியை வழங்கிய
பிரான்ஸ் வாழ் தமிழ் உறவுகளுக்கு நன்றியை தெரிவித்ததுடன்  கிளிநொச்சி,
முல்லைதீவு மாவட்ட உட்கிராமங்களுக்கு உதவிகள் கிடைப்பது மிகவும் குறைவாக
உள்ளதை எடுத்துகூறினார் எனவே அரச சார்பற்ற அமைப்புக்களும், புலம்பெயர் தமிழ்
உறவுகளும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட எல்லையில் உள்ள  உட் கிராமங்களைச்
சேர்ந்த மக்களின் பொருளதார, கல்வி மேம்பாட்டுக்கு உதவ முன்வர வேண்டும் என்றும்
குறிப்பிட்டார்.


கருத்துரையிடுக

 
Top