வடமாகாணத்தின் புதிய ஆளுநராக வெளியுறவுத் துறையின் முன்னாள் செயலாளர் எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார நியமிக்கப்படுகிறார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இணையதளத்தின் மூலம் அறிவித்துள்ளார்.
 முன்னர் ஆளுநராக இருந்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 பாலிஹக்கார ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகத்துக்கான பிரதிநிதியாக முன்னர் பணியாற்றியுள்ளார். அதேபோல் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்த விவாதங்கள் ஐ நாவில் நடைபெற்ற போது அரச தரப்பில் பங்கேற்ற குழுவிலும் இருந்துள்ளார். இலங்கையில் போருக்கு பின்னரான காலப்பகுதியில், முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். 
இராணுவத்தைச் சாராத ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் மீண்டும் பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஒருவரே வடமாகாண  ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது .

கருத்துரையிடுக

 
Top