ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள c செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்துக்குச்சென்ற ஜனாதிபதியை, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் வரவேற்றார். அதைத்தொடர்ந்து செயலகத்திலிலுள்ள புத்தர் சிலையை வழிபட்ட ஜனாதிபதிக்கு, மகா சங்கத்தினரும், முஸ்லிம், இந்து ,கிறிஸ்தவ மதத்தலைவர்களும் நல்லாசி வழங்கினர்.

இதனையடுத்து அங்கு குழுமியிருந்த அதிகாரிகள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றினார்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுத்தீன் ,பாராளுமன்ற உறுப்பினர்களான ராதா கிறிஷ்ணன், பீ.திகாம்பரம் ,ஆர்.சம்பந்தன், ரஜீவ் விஜேசிங்க உட்பட பிரமுகர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.


கருத்துரையிடுக

 
Top