கிழக்கு மாகாண சபையிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியைப் பறிகொடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. 
இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சிகளுடன் கூட்டணியாக ஆட்சியமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் 2012 இல் இடம்பெற்றது. இதில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. இதனால் 15 ஆசனங்களைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சியமைத்தன.

 இந்நிலையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்தது. இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனானஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கூட்டணி முடிவுக்கு வந்தது. இதனால் மீண்டும் கிழக்கு மாகாண சபையில் எவருக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் போனது. 

இந்நிலையில் தேர்தலில் 11 ஆசனங்களுடன் இரண்டாவது இடத்தைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது எனத் தெரிய வருகின்றது.


கருத்துரையிடுக

 
Top