(பி.எம்.எம்.ஏ.காதர்)
யார் கேட்டாலும் கேட்;காவிட்டலும் தேசிய காங்கிரஸின் பிரதிச் செயலாளர் ஐ.ஏ.ஹமீட் அவர்களுக்காக மருதமுனை மண்ணுக்கு நகரசபை வழங்கு வேன் என தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவருமஇ; உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சருமான  ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார். 
எந்த அரசியல் அதிகாரமும் இல்லாத மருதமுனைப் பிரதேசத்திற்கு உள்ளுராட்சி சபை ஒன்றை உருவாக்கித் தருமாறு கடந்த சில மாதங்களாக உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவிடம் மருதமுனை  முக்கியஸ்த்தர்கள்; அழுத்தம் கொடுத்து வந்தனர் 
இதன் மற்றுமொரு சந்திப்பாக இன்று (31-12-2014)மாலை மருதமுனை அல்மனார் மத்திய கல்லுரில் மருதமனை அனைத்துப் பள்ளிவாசல்கள்; சம்மேளனத்தின் தலைவர் மௌலவி கே.எல்.எம்.ஹனிபா தலைமையில் இடம் பெற்ற சந்திப்பில் உரையாற்றிய போதே அமைச்சர் அதாஉல்லா இதனைத் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை  உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் ; தேசிய காங்கிரஸின் பிரதிச் செயலாளாரும் உள்ளுர் ஆளுகை நிறுவகத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான பொறியிலாளர் ஐ.ஏ.ஹமீட். தேசிய காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளாளரும்,கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான எப்.எம்.அமீருள் அன்சார் மௌலானா,கிழக்கு மாகாண சபை உறுப்பினர். ஆரிப் சம்சுதீன் உள்ளீட்ட மருதமுனை முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்  
கருத்துரையிடுக

 
Top