எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் அரச அதிகாரிகள் ஒரு இலட்சத்து 75,000 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. 

இவர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக மேலதிகத் தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ குறிப்பிட்டுள்ளார். 

வாக்களிப்பு நடைபெறவுள்ள தேர்தல் மத்திய நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ள மத்திய நிலையங்கள் போன்றவற்றில் சேவையில் இவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

இதேவேளை இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக தாபல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதுவரை நூற்றுக்கு 95 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக உதவித் தபால் மா அதிபர் கூறியுள்ளார். 

கருத்துரையிடுக

 
Top