(பி.எம்.எம்.ஏ.கதர்)
பெரிய நீலாவணை அக்பர் வித்தியாலய மாணவர்களின் “தரம் 5 புலமைப்பரிசில் தினம்-2014” நிகழ்வு  அண்மையில் அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசல் மேல் மாடியில் அதிபர் ஏ.எம்.ஜிப்ரி தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிசாம் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப்; பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் ஆகியோரும் கலந்து கொண்டனர். விஷேட அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.சீ.எம்.தௌபீக்,எஸ்.எல்.ஏ.றஹீம்,பி.எம்.வை.அறபாத், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

மேலும் அதிதிகளாக  பாடசாலை ஸ்தாபகர் வை.எல்.அன்சார்,அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் ஐ.எல்.எம்.பாறூக்,அதிபர்களான எம்.எம்.ஹிர்பகான், எஸ்.எம்.எம்.அமீர்,ஏ.குணுக்கத்துள்ளா,எம்.ஏ.எம்.இனாமுல்லா,ஏ.ஆர்.நிஃமத்துல்லா,ஏ.சி.எம்.அபுபக்கர்,எம்.எல்.எம்.மஹ்ரூப் ஆகியோருடன் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் 5ம் தர புலமைப் பரிசில் பரிட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் 155 புள்ளிகளைப் பெற்ற முதல் மாணவியும் இப்பாடசாலையில் சித்தியடைந்த  ஒரே ஒரு மாணவியுமான  அப்துல் றஹீம் ஆஷா ஹயாவுக்கு   அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசல் சார்பாக  பிரதம அதிதி  எம்.ரி.அப்துல் நிசாம் துவிச்சக்கர வண்டி ஒன்றை பரிசாக வழங்கினார். திவிநெகு உத்தியோகத்தர் ஏ.கமால் மாணவி ஆஷா ஹயாவூக்கு பதக்கம் அணிவித்து கௌரவித்தார்.    
மேலும் 5ம்தர புலமைப்பரிசில் பரிட்சைக்குத் தோற்றி வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெறாத மாணவர்களுக்கும்,கற்பித்த ஆசிரியர்களுக்கும் அதிதிகளால் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.  இந்த நிகழ்வில் “இளம் பரிதி”என்ற பெயரில் மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. 


கருத்துரையிடுக

 
Top