கிழக்கு மாகாண அரச சேவையாளர்களின் சம்பள கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காணப்பட்டுள்ளது. இதையடுத்து இம்மாதம் 23ம் திகதி இவர்களுக்கான சம்பள கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
2015ற்கான கிழக்கு மாகாண சபை பஜட் நிறைவேற்றப்படாததால் எழுந்த இழுபறி நிலையை கருத்தில்கொண்ட ஆளுநர் இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்குகொண்டு வந்தார். இதன்போது இந்த இழுபறி நிலைக்கு சுமுக தீர்வு காணப்பட்டதையடுத்தே சம்பளம் வழங்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றுவதில் தடங்கல் ஏற்பட்டது. இதனால் கிழக்கு மாகாண சபை அரச சேவையாளர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் செய்ய முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது.
ஆளுநரின் தலையீட்டினாலும் அதிமேதகு ஜனாதிபதியின் வழிகாட்டலினாலும் இப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது. இதையடுத்து கிழக்கு மாகாண அரச சேவையாளர்களுக்கு இம்மாதம் 23ம் திகதி சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

 
Top