(பி.எம்.எம்.ஏ.காதர்)
பெற்றௌரை இழந்தஇ வருமானம் குறைந்த முஸ்லிம்இதமிழ்  குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு  கற்றல் உபகரணங்கள் வழங்கிய நிகழ்வு  அண்மையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அட்டாளைச்சேனை,திராய்க்கேணி,பாலமுனை,ஒலுவில் ஆகிய இடங்களைச் சேர்ந்த இருநூறு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன 

சுவிற்சிலாந்தில் இருந்து Hegas Cetaring  நிறுவனத்தின் உரிமையாளரும்,தொழில் அதிபருமான திருமதி  நிஷாந்தினி,கட்டாரில் தொழில் புரியும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸின் சகோதரர் எஸ்.எல்.முஸம்மில் ஆகியோரின் நிதி அனுசரணையில் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் கடந்த காலங்களில்; பெற்றோரை இழந்த வருமானம் குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு தனது சொந்த நிதியில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top