கல்முனை தாறுல் அர்கம் பாலர் பாடசாலை மற்றும் மாலைநேரப் பாடசாலை மாணவர்களின் 10வது ஆண்டு நிறைவு விழாவும் கலை நிகழ்ச்சியும் இன்று (06) செவ்வாய்க்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் றாஸிக் பரீட் மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
கல்முனை தாறுல் அர்கம் பாலர் பாடசாலையின் கல்விப் பகுதிப் பொறுப்பாளர் எஸ்.எச்.அப்துல் வதூத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் கலந்து சிறப்பித்தார்.
இதில் மார்க்கத்துடன் தொடர்புடைய கலை நிகழ்ச்சிகளும், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளும் மாணவர்களால் அரங்கேற்றப்பட்டன.
இந்நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக விரிவுரையாளர் எம்.ஐ.எம். அமீர், ஓய்வுபெறற் ஆசிரிய ஆலோசகர் யூ.எல். உதுமாலெப்பை அவர்களும் விசேட அதிதியாக கல்முனை தாறுல் அர்கம் பாலர் பாடசாலையின் அதிபர் மௌலவி எம்.ஐ.எம். றபீக், மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

 
Top