முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள கோரிக்கைகளை பரிசீலிப்பதற்காக இன்றிரவு விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. இதன் பின்னரே முஸ்லிம் காங்கிரஸ் தனது இறுதியான முடிவை அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 
இரவு நடைபெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கரையோர மாவட்டம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனை நிறைவேற்றித் தந்தால் தமது கட்சி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்குமென முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நேற்று றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிரணியில் இணைந்துகொண்டுள்ளது. எஞ்சியிருக்கும் முஸ்லிம் காங்கிரஸையாவது தக்கவைத்துக்கொள்ள முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்பிரகாரம் முஸ்லிம் காங்கிரஸின் பிரதான கோரிக்கையான கரையோர மாவட்டத்தை இன்றிரவு வழங்குவதற்கு இணக்கம் காணப்படலாமென நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கரையோர மாவட்டம் வழங்கப்பட்டால் முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தவுக்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

பல மாதங்களாக 20க்கு மேற்பட்ட கூட்டங்களை நடாத்திய முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை எவ்வித முடிவுகளையும் அறிவிக்காது இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் இன்றிரவு விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top