உலகெங்கிலும் கோலாகலமான முறையில் டிசெம்பர் மாதம் 25 ஆம் திகதியான இன்று (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது வெறுமனே பண்டிகை மட்டுமன்றி அனைத்து மக்களுக்குமான சமாதான செய்தி வாழ்த்துக்களையும் தன்னகத்தே கொண்டு இவ்வாண்டுக்கான நத்தார் பண்டிகை உலகெங்கிலும் உள்ள மக்களை மகிழ்ச்சியில் திகைக்க வைக்கவுள்ளது.

இதன் அடிப்படையில் கல்முனை பிரதேசத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நத்தார் பண்டிகை மிகச் சிறப்பாக இடம் பெற்றது. கல்முனை மெதடிஸ்த ஆலயத்தில் நடை பெற்ற நத்தார் வழிபாடுகள் போதகர் ஜே.அழகுராஜா தலைமையில் இடம் பெற்றது. இலங்கை கத்தோலிக்க திருச் சபை உப தலைவர் வீ.பிரபாகரன் உட்பட பங்கு மக்கள் பலரும் கலந்த கொண்டனர்.

இதே வேளை கல்முனை திரு இருதய நாதர் ஆலயத்தில் ஆலய பங்கு தந்தை லியோ அன்ரனி தலைமையில் ஆலய வழிபாடுகள் இடம் பெற்றன. நாட்டின் அமைதி, சமாதானம் வேண்டி வழிபாடுகளும் இடம் பெற்றதுடன் பங்கு மக்கள் ஒருவருக் கொருவர் நத்தார் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top