(பி.எம்.எம்.ஏ.காதர்)நாட்டில் பல இடங்களில் இடி மின்னல் கடும் மழை  காற்று கடல் கொந்தளிப்பு வெள்ளம்.  பல பிரதேசங்களில் மக்கள் இடம் பெயர்ந்து உறவினர்களின் வீடுகளிலும்> முகாம்களிலும் தங்கியுள்ளனர். இந்த அடை மழை காரணமாக வாகனப் போக்கு வரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன் இயல்பு நிலையும்  பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்  பொருட்களின் விலைகள்  அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்  தட்டுப்பாடும் ஏட்பட்டுள்ளது. 
இந்த மழை வெள்ளம் காரணமாக கல்முனை பிரதேச செயலக முஸ்லிம் பிரிவில் 2607 குடும்பங்களைச் சேர்ந்த 9385 பேர் இடம் பெயர்ந்துள்ளதாக  கல்முனை பிரதேச செயலக நிருவாகக்; கிராம அதிகாரி ஏ.எச்.ஏ.லாஹீர் தெரிவித்தார். இதில் மருதமுனைப் பிரதேசத்தில் 1132 குடும்பங்களும்>கல்முனைக்குடிப் பிரதேசத்தில் 1475 குடும்பங்களும் அடங்குகின்றன பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இடம் பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மருதமுனைப் பிரதேசத்தில் ஹாஜியார் வீதி> மசூர் மௌலானா வீதிஇகானடி வீதி>சமூர்த்தி வீதி உள்ளீட்ட பல வீதிகள் பயனிக்க முடியாத வகையில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பல வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவு  வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிரதேச செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதே வேளை மருதமுனைப் பிரதேசத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வழிந்தொடச் செய்வதற்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் கல்முனை மாநகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பருடன்  தொடர்பு கொண்டு எடுத்த முயற்சியின் காரணமாக நீரை வழிந்தொடச் செய்யும் வேலை நடைபெற்று வருகின்றது.  

கருத்துரையிடுக

 
Top