அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின்  அங்கத்தவரான சிரேஸ்ட ஊடகவியலாளர்  பொத்துவில்லை  சேர்ந்த  ஏ.சி.அகமது லெப்பை இன்று இரவு காலமானார்.
 அவரது ஜனாஸா இன்று காலை நல்லடக்கம் செய்யப் படவுள்ளது .

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு அம்பாறை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர்  இன்று இரவு காலமானார்.
ஒய்வு பெற்ற இ .போ .ச  டிப்போ பொறுப்பதிகாரியான இவர்  1947.03.25 ஆந்  திகதி பிறந்தவராவார். இவரது மரணச் செய்தி கேட்டு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர்  மீரா இஸ்ஸதீன் உட்பட அனைத்து  உறுப்பினர்களும் அனுதாபத்தை தெரிவித்துள்ளனர் . 

கருத்துரையிடுக

 
Top