கல்முனை இஸ்லாமாபாத் கிராமத்தில் உள்ள சுகாதாரப் பரிசோதகர் காரியாலயம் அருகில்  கொட்டப் படும் கழிவுகளினால் சுகாதார சீர் கேடு ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர் . கடந்த காலங்களில் இஸ்லாமாபாத்  வீட்டு திட்ட மக்களின் கழிவுக்கென  கல்முனை மாநகர சபையினால் உளவு இயந்திர  பெட்டியொன்று நிறுத்தப் பட்டு  அதனுள்  கழிவுகள் சேகரிக்கப் பட்டு வந்தன .
கல்முனை மாநகர சபையினால் அந்த நடை முறை  தற்போது இல்லாததனால் மக்கள் சுகாதாரப் பரிசோதகரின் காரியாலயம் அருகில் குப்பைகளை கொட்டி வருகின்றனர் .

மழை  காலம் என்பதால்  அங்கு போடப் பட்டுள்ள  கழிவுகள் துர்வாடை வீசுவதுடன் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதன் அருகில் இருக்கும் வலயக் கல்வி அலுவலகத்துக்கு வரும்  ஆசிரியர்கள் முகம் சுளித்த நிலையிலேயே  இங்கு வருகின்றனர்  . 
பல திட்டங்களை அமுல் படுத்தும்  கல்முனை மாநகர சபை நிருவாகமும் ,பொது சுகாதாரப் பரிசோதகரும்  இவ்விடயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை என மக்கள்  குற்றம் சுமத்துகின்றனர் .

கருத்துரையிடுக

 
Top