கல்முனை தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராகிய தமக்கு எதிராக பல சதி முயற்சிகள் நடைபெறுவதாக ஹரீஸ் எம்.பி. கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து சிலரும், வெளியிலிருந்து பலருமாக இந்த சதி முயற்சிகளை அரங்கேற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முழு முஸ்லிம் சமூகத்தின் நலனை கருத்திற் கொண்டும், அம்பாறை குறிப்பாக கல்முனைத் தொகுதி மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டும் தமது தீர்மானங்களை அமையுமென எமது இணையத்திற்கு கருத்துரைத்த ஹரீஸ், தான் மௌத்தாகாமல் இருந்தால் இன்னும் சில தினங்களில் தமது அதிரடி அறிவிப்பு வெளியாகுமெனவும் மேலும் கூறினார்.

கருத்துரையிடுக

 
Top