சாய்ந்தமருது மக்களின் நீண்ட நாள் அவாவாக இருக்கின்ற உள்ளுராட்சி சபைக் கோரிக்கை மிக விரைவில் நகர சபை என்ற அந்தஸ்த்துடன் சாய்ந்தமருதுக்கு மகுடம் சூட்டப்படும் என உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளா் மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்து நேற்று இரவு சாய்ந்தமருது பிரதான வீதியில் தோ்தல் பிரச்சார கூட்டம் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் விஷேட ஆலோசகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது. இதில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவா் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவா் அங்கு தொடா்ந்து உரையாற்றுகையில்,

சாய்ந்தமருது மக்களினால் மிக நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வரும் உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித் தருவதுடன் அதனை பிரதேச சபையாக அல்லாது சாய்ந்தமருதிற்கு நகர சபை என்ற அந்தஸ்துடன் வழங்கப்படும்.

இதேவேளை கடந்த காலங்களில் கல்முனைப் பிரதேசம் இருந்தது போல் நான்கு சபைகளாக பிரிக்கப்படவுள்ளன. அதாவது கல்முனை மாநகர சபை, மருதமுனை பிரதேச சபை, தமிழ் மக்களுக்கான பிரதேச சபை, சாய்ந்தமருது நகர சபை என பிரிக்கப்படவுள்ளது.

இதனால் இவ் ஊர்களுக்கு குட்டி அரசியல் அதிகாரம் கிடைக்கவுள்ளன. இதன் மூலம் இப்பிரதேசங்களின் அபிவிருத்திற்கு கூடுதல் நிதிகள் கிடைக்கப் பெறும்.

புதிதாக உருவாக்கப்படும் இந்த உள்ளுராட்சி சபைகளினால் கல்முனைப் பிரதேச எந்த ஊருக்கோ சமூகத்துக்கோ அநீதியாக இருக்காது எனவும் தெரிவித்தார்.

இப்பிரச்சார கூட்டத்தில் கிழக்கு மாகான வீதி அபிவிருத்து அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான இஸட்.ஏ, ரகுமான், ஏ.எம்.றியாஸ் உள்ளிட்ட பொது மக்களும் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

 
Top