தவிர்க்க முடியாத காரணங்களால் தபால் மூலம் வாக்களிக்க தவறியவர்களுக்கு இன்று (30) வாக்களிப்பதற்கான விசேட சந்தர்ப்பமொன்று பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.
இதற்கமைய கடந்த 23, 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் வாக்களிக்க தவறியவர்கள் இன்று தமது அலுவலகம் அமைந்துள்ள நிருவாக மாவட்டத்தின் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு நேரில் சென்று வாக்களிக்க முடியும்.
மாவட்டத் தேர்தல்கள் அலுவல கத்தில் முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 4.15 வரை அஞ்சல் வாக்குகள் அடையாள மிடலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top