டென்மார்க் ஜீவ வார்த்தை ஊழியர்களால் மட்டக்களப்பில் பின்தங்கிய கிராமங்களில் ஊழியங்களைச் செய்யும் திருச்சபைகளை ஊக்குவிக்கும் முகமாக ஐக்கிய ஒளி விழாவினை பாஸ்டர் ஏசுநேசன் தலைமையில் ஒழுங்கு செய்திருந்தனர்.  விழாவினை உதயாநகைமாளிகை உதயன்,ரூபினி நகைமாளிகை யோகராஜா, லக்ஷ்மியன் ஸ்டோர்ஸ் குணரெட்னம், வெல்கம் நகைமாளிகை ரவி வாழ்வோசை செவிப்புலனற்றோர் பாடசாலை அதிபர் திருமதி ஆ. டேவிட் ஆகியோர் மங்கள விளக்கேற்றி நிகழ்ச்சியை ஆரம்பிக்க பிரதம விருந்தினராக வருகைதந்திருந்த YMCA பொதுச்செயலாளர் Dr .D.D .டேவிட் அவர்களும் சிறப்பு விருந்தினராக மட்/ வலயக்கல்வி அலுவலக சேவைக்கால ஆலோசகர்  N. கணேசலிங்கம் அவர்களும்உரையாற்றினர். 

தொடர்ந்து ஜீவவார்த்தை ஊழியங்களால் பதிவேற்றம் செய்யப்படும் வேதவசனங்களும் , எதிர்வரும்ஆண்டில் 200 வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டம் பற்றிய விளக்கம் திருமதி L . சந்திர மோகனால் விளக்கப்பட்டது. அத்துடன் வறிய மாணவர்களின் கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் கலைநிகழ்வுகளுடன் மட்டகளப்பு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சிறப்பு ஜெபமும், இறுதியாக வறியமாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கியதுடன் சமூகசேவகி திருமதி L . புஸ்பராசாவின் நன்றியுரையுடன் இனி தேநிறைவுபெற்றது. 

சீரற்ற கால நிலையின் மத்தியிலும் மேற்படி ஒளி விழா பொதுமக்கள் ஒத்துழைப்புடன் சிறப்பாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். கருத்துரையிடுக

 
Top