இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கு ஆதரவாக அம்பாரை மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேசங்களில் பத்திரிகையாளரொருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் தேசிய பத்திரிகைகளின் பிரதேச செய்தியாளராக பணியாற்றும் ஊடகவியலாளர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதியினால் ஏற்பாடு செய்யப்படும் பிரச்சார கூட்டங்களிலும் கலந்து  கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார் .
(14.12.2014) அன்று கல்முனைத் தொகுதி பாண்டிருப்பு கிராமத்தில் மகிந்த ராஜபக்‌ஷவிற்கு ஆதரவு திரட்டும் வகையில் இவரது அலுவலகத்தில் இவரது தலைமையில் மக்கள் சந்திப்பொன்றும் நடைபெற்றுள்ளது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி இந்த சந்திப்பில் கலந்து கொணடார்.
நடுநிலையுடன் பக்க சார்பு இன்றி நடந்து கொள்ள வேண்டிய பத்திரிகையாளர்களில் குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் சிலரது போக்கு பத்திரிகைதுறைக்கு களங்கம் ஏற்படுத்துவதாக மாவட்டத்திலுள்ள பத்திரிகையாளர் அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
அண்மையில் பாடசாலை காவலாளி நியமனம் கிடைத்த நன்றிக்கடனுக்காக பத்திரிகை தர்மத்தை விற்பனை செய்யும் வகையில் இவர் நடந்து கொள்வதை விட அதிலிருந்து ஒதுங்குவதே மேல் என பலரும் பேசிக்கொள்கிறார்கள். பத்திரிகையாளர் தலைமையுரை அருகில் இனியபாரதி.

கருத்துரையிடுக

 
Top