எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தாம் ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளதாகவும்   தன்னுடன் சேர்த்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் 7 பேர், பிரதேச சபை உறுப்பினர்கள் 69 பேர் எதிர்கட்சியில் இணைந்து கொண்டதாக அமைச்சர்  ரிசாத் பதியூதின் தெரிவித்துள்ளார் .
எதிர்கட்சித் தலைவர் ரணில் அலுவலகத்தில் நடைபெற்ற  விசேட ஊடக சந்திப்பில்  அமைச்சர்  ரிசாத் பதியூதின் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்
இந்த ஊடக சந்திப்பில் அண்மையில் அஸ்வர் பதவி நீங்க அந்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்ட தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலியும் கலந்து கொண்டிருந்தார். இங்கு உரையாற்றிய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தின் பிரபல கட்சியொன்று தனக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக கூறியுள்ளார.


கருத்துரையிடுக

 
Top