ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் தபால் மூலம் நாளை 22 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக பிரதி தபால் அதிபர் டபிள்யு.ஏ.ஜீ.விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க 1,50,44,490 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான வாக்காளர் அட்டைகளை மாவட்ட மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் 20 ஆம் திகதி தபால் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நத்தார் தினத்தன்றும் வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெறும். நாளை 22 முதல் 31 ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் கிடைக்காத வாக்காளர்கள் ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் 08 ஆம் திகதி வரை சம்பந்தப்பட்ட தபால் நிலையங்களில் தமது ஆள் அடையாளத்தை நிரூபித்து பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பிரதி தபால் அதிபர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top