ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் வாக்களிப்பு மழைக்கு மத்தியிலும் சுமுகமாக இடம் பெற்றது. கல்முனை பிரதேசத்தில் கல்முனை பொலிஸ் நிலையம் தவிர்ந்த அனைத்து திணைக்களங்களிலும் இன்று காலை வாக்களிப்பு இடம் பெற்றன.

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் 367 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் அப்துல் ஜலீல் தலைமையில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களின் மேற்பார்வையில் நான்கு பிரிவூகளாக  தபால் வாக்களிப்பு சுமுகமாக இடம் பெற்றது. பலத்த மழை காரணமாக காலை வேளையில் வாக்களிப்பு மந்தமாகவே இடம் பெற்றது. 

வாக்களிப்பின் போது பெப்ரல் தேர்தல் கண்காணிப்பாளர்கள் பிரசன்னமாகி இருந்தனர். பகல் வேளையின் போது வாக்களிப்பு அதிகரித்ததை அவதானிக்க முடிந்தது.
கருத்துரையிடுக

 
Top