பி.முஹாஜிரீன்)
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை, வெள்ளம், கடல் கொந்தளிப்பு மற்றும்; சீரற்ற காலநிலை காரணமாக ஒலுவில் பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு அபாயம் தோன்றியுள்ளது.

ஒலுவில் வெளிச்ச வீட்டை அண்டிய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பு காரணமாக தென்னந் தோட்டங்கள், மீனவர் வாடிகள் மற்றும் கட்டடங்கள் என்பன கடல் அலையினால் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெளிச்ச வீட்டுக்குச் செல்லும் பாதையும் முற்றாக சேதமுற்றுள்ளது.

கடலரிப்பினால் இப்பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு மீனவர்களின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கான தென்னந் தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இப்பிரதேசத்தில் ஒவ்வொரு வருடமும் பல தடவைகள் மிக மோசமான கடலரிப்பு ஏற்படுவதோடு இக்கடலரிப்பைத் தடுக்க இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென பிரதேச பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துரையிடுக

 
Top