ஜனாதிபதி தேர்தலுக்கான பெப்ரல் கண்காணிப்பு நிலையத்தின் திகாமடுள்ள மாவட்டத்துக்கான அவதானிப்பு நிலையம் இன்று சேனைக் குடியிருப்பு சேவோ நிலையத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

நீதி நேர்மையான தேர்தலொன்றை நடாத்தி முடிக்கும் வகையில் அவதானிகளாக செயற்படும் இந் நிலைய திறப்பு விழா சேவோ நிறுவனத்தின் பணிப்பாளர் கே.சத்திய நாதன் தலைமையில் நடை பெற்றபோது  பெப்ரல் அமைப்பின் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் ஸ்ரீதரன் சபா நாயகம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேர்தல் அவதானிப்பு அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார்.
ஜனாதிபதி தேர்தல் தினத்தன்றும்  தபால் வாக்களிப்பு தினத்தன்றும் அவதானிப்பாளர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது பற்றி மாவட்டத்தின் பல பிரதேசங்களிலுமிருந்து தெரிவு  செய்யப்பட்ட அவதானிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top