தென்கிழக்கு கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் வலுவடைந்துள்ளதால் நாட்டின் பெரும்பாலான பிரதேசங் களில் இன்றும் அடிக்கடி மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத் துள்ளது.
இதேவேளை, நாடு முழுவதும் முகில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் அதிகாரி லக்ஷ்மி லத்தீப் தெரிவித்தார்.
நாட்டின் நாலா பாகங்களிலும் அடிக்கடி மழை அல்லது காற்றுடன் கூடிய மழை பெய்யலாம். சில இடங்களில் கடும் மழை பெய்யலாம் என்றும் 150 மில்லி மீற்றர் கூடுதலாக பெய்வதற்கான வாய்ப்புள்ள தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நாட்டின் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணித் தியாலத்திற்கு 60 முதல் 80 கிலோமீற்றர் வரை வீசுமென்றும் கடலுக்கு செல்வதை மீனவர்கள் தவிர்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
இதன் காரணமாக சில பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
கடற்கரையை அண்டி வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வளி மண்டலவியல் திணைக்களத்துக்கு கிடைத்த தகவலின் படி, பொத்துவில் பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சியான 275.8 மில்லி மீற்றர் மழை பெய்ததுடன் பதுளை 195.9, மொனராகலை 145.7, பண்டாரவளை 134.9 மற்றும் ஹம்பாந்தோட்டையில் 112 மில்லி மீற்றர் மழையும் பெய்துள்ளது.

கருத்துரையிடுக

 
Top