தொடரும் பலத்த  மழையினால் கல்முனையில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கல்முனை நகரின் ஒரு பகுதி வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றது.

இந்த பிரதேசத்தில் அரச அலுவலகங்கள் அதிகம் உள்ளதால் வேலைக்கு செல்லும் உத்தியோகத்தர்கள் இன்று காலை சிரமப் பட்டனர். அத்துடன் கல்முனை பஸ் டிப்போ, தமிழ் பிரிவூ பிரதேச செயலகம், தபாற் கந்தோர், இலங்கை மின்சார சபை, காணி திணைக்களம், இலங்கை வங்கி , மீன் பிடி திணைக்களம் போண்ற அத்தியவசியமான அலுவலகங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் இயல்பு நிலை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று தபாலகங்களுக்கு அனுப்பி வைக்கவுள்ள நிலையில் கல்முனை தபாலகம் நீரில் மூழ்கியுள்ளது.

இதே வேளை தொடரும் மழையினால் கல்முனையில் வீடுகளும் பல நீரில் மூழ்கி கிடக்கின்றது.
கருத்துரையிடுக

 
Top