இலங்கை வர்த்தக வங்கி அறிமுகப் படுத்தியுள்ள அருணலு  சிறுவர்  சேமிப்பு  கணக்கு திட்டத்தின் கீழ்  5ஆம் ஆண்டு புலமை பாரிசில் பரீட்சை வெற்றியாளர்களுக்கு  பணப் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ்  கல்முனை  வங்கி கிளையினால் 5ஆம் ஆண்டு புலமை பாரிசில் பரீட்சையில் திறமை காட்டிய மூன்று மாணவர்களுக்கு  பணப் பரிசு வழங்கும் நிகழ்வு இன்று (23) வங்கியில் இடம் பெற்றது .

கல்முனை வர்த்தக வங்கி கிளை முகாமையாளர்  ஜே.எம்.சித்தீக் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாட சாலை  மாணவன்  கே. நிருஜீத்  என்பவருக்கு 10ஆயிரம் ரூபாவும் , பாண்டிருப்பு அல் - மினன் வித்தியாலய மாணவன் ஏ.எப்.தானிஸ்  என்பவருக்கு 10ஆயிரம் ரூபாவும், கோட்டைக்  கல்லாறு  கண்ணகி வித்தியாலய மாணவன் எஸ்.பனோஸ்  என்பவருக்கு  5ஆயிரம் ரூபாவும் பரிசாக வழங்கி வைக்கப் பட்டது.
இந்த நிகழ்வில்  வங்கி கிளை ஊழியர்களும் , மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர் .
கருத்துரையிடுக

 
Top