எதிர்வரும் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியாத தபால் மூல வாக்காளர்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு 30 ஆம் திகதி வரை சென்று வாக்களிக்க முடியும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.
இத்தினங்களில் வாக்களிக்கத்தக்க வகையில் 05 இலட்சத்து 48 ஆயிரம் தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதற்கிணங்க தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் கடந்த 15 ஆம் திகதி தேர்தல் செயலகத்தினால் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 
இதன் பிரகாரம் எதிர்வரும் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்காளர்கள் வாக்களிக்கத்தக்க வகையில் வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் அலுவலகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹண அபேவர்த்தன தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top