(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை டெக்லாங் பாலர் பாடசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா-2014 அண்மையில் மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. டெக்லாங் பாலர் பாடசாலையின் தலைவரும், கல்முனை பிரதேச திவிநெகும அதிகாரியுமான ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் இந்த விழா நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக  தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும்,“மர்ஹூம் ஏ.ஆர்.ஏ.அஸீஸ் பவூண்டேசனின்” தவிசாளரும்,முகாமைதுவப் பணிப்பாளருமான ஏ.ஏ.முகம்மது நுபைல் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக  சப்ரகமுவ பல்கலைக் கழகப்  பதிவாளர் எம்.எப்.ஹிபத்துல் கரீம், கிழக்குப் பல்கலைக் கழக உதவிப் பதிவாளர் எம்.எப்.எம்.மர்சூக் ஆகியோருடன் பாடசாலை ஆசிரியை திருமதி ருபைதா சலாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன் மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன அறிவிப்பாளர் எம்.ஏ.எம்.நசிர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.  கருத்துரையிடுக

 
Top