மண்சரிவு  காரணமாகப் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட கொஸ்லாந்தை – மீரியபெத்த தோட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்கும் பொருட்டு கிழக்கு மாகாணத்தில் பல்வேறு அமைப்புக்களும் உதவிப் பொருட்களைச் சேகரித்துவருகின்றன. 

இதன்படி  கல்முனை புனித வின்சன்ட் டி போல் தர்ம சபை நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கென கல்முனை பிரதான வீதியில் நிவாரணப் பொருட்களைச் சேகரிக்கும் நிலையம் ஒன்றை இந்த அமைப்பினர் திறந்துவைத்துள்ளனர். 

இவ்வாறு சேகரிக்கப்படும் பொருட்கள், பணம் என்பன பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அமைப்பினர் ஊடாக நேரடியாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேசத்ததைச் சேர்ந்த மூவின மக்களாலும் வழங்கப் படுகின்ற பெருந் தொகையான அவசர நிவாரணப் பொருட்கள் இனறு கல்முiயிலிருந்து கொஸ்லாந்தை – மீரியபெத்த மக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
கருத்துரையிடுக

 
Top