(நடனம்)
கமீட் அமைப்பின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்ட பயனாளிகளின் வாழ்வாதாரம் மேம்பாடு ஊக்குவிக்கும் முகமாக கால் நடை வளர்ப்பு தொடர்பான களபார்வையிடும் பயிற்சி சத்துருக்கொண்டான் அரசகால்நடைவளர்ப்பு நிலையத்தில் அமைப்பின் திட்ட இணைப்பாளர்  எஸ்.ஜெயகுமார்  தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சி கள நெறியில்  ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியிலான கன்டிகப் இன்டர் நெசனல் நிறுவனத்தின் செயற்திட்டத்தின் கமீட் அமைப்பு நடை முறைப்படுத்தலின் பல பயனாளிகள் கலந்துகொண்டதுடன் கால் நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் வே.கோவேந்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் நா.திருக்கேதீஸ்வரன் மற்றும் அரச கால் நடைவளர்ப்பு நிலையத்தின் முகாமையாளர் எம்.ஆர் .நாகலிங்கம் ஆகியோர்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. கருத்துரையிடுக

 
Top