-டீன் பைறுாஸ்-

கட்டார நாட்டில் உள்ள ” STAFFORD INTERNATIONAL SCHOOL ” இல் தரம் 09 ல் கல்வி கற்று வரும் காத்தான்குடியைச் சேர்ந்த முகம்மது ஜவ்சித் என்ற மாணவன் பாடசாலை மட்டத்தில் பல்வேறு பட்ட போட்டிகளில் கட்டார் மண்ணில் பல சாதனைகளை புரிந்து வருகின்றார்.  புதிய காத்தான்குடி பரீட் நகரைச் சேர்ந்த முஹம்மத ஜவ்பர் சில்மியா என்பவர்களது அன்பு மகனான இவர் தனது 14 வயதில் பல நாடுகளைச் சேர்ந்த குறிப்பாக (நைஜீரியா,ஆப்ரிகா,இந்தியா,பிலிபைன்ஸ்,இலங்கை) போன்ற நாடுகளைச் சேர்ந்த  மாணவர்களுக்கு மத்தியில் இவர் தனது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றார்.
இவர் உயரம் பாய்தல்,குண்டெறிதல்,தடைதாண்டி ஓட்டம்,நீளம் பாய்தல், 800 M, 1200 M, மரதன் ஓட்டம் ஆகிய போட்டிகளில்  தனது திறமைகளை வெளிக்காட்டி வருவதுடன் கல்வி மட்டத்திலும் சிறந்த பெறு பேறுகளை பெற்று வருகின்றார்.
மேலும் இவரது திறமைகளை நன்குணர்ந்த QATTAR AL-SADD SPORTS CLUB தனது அணிக்காக விளையாடுமாறு ஒப்பந்த அடிப்படையில் இவரை இணைத்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.
பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற 18 வயதுக்க கீழ் பட்டோருக்கான மெய் வல்லுநர்  போட்டியின் போது இவர் தனது 14 வயதில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட வீரர் MIM.பைசர் (eastern transport aut-ser) என்பவரின் மருமகனும், காத்தான்குடி தள வைத்திசாலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அல்ஹாஜ் எம்.இஸ்மாயீல் என்பவரின் பேரனுமாவார்.

கருத்துரையிடுக

 
Top