சீகிரியா சுற்றுலா சென்ற போது புராதன சின்னங்களை மையினால் எழுதியதற்காக கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட மாணவி அரசியல் பிரமுகர்களின் முயற்சியினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை அல்- பஹ்ரியா மகா வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவர்கள் சீகிரியாவுக்கு சுற்றுலா சென்ற போது மாணவி ஒருவர் அங்கு தடைசெய்யப்பட்ட புராதன சின்னங்களை மையினால் எழுதியதினால் தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்யப்பட்டு சீகிரியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அவர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
புராதன சின்னங்களை மையினால் எழுதுவதோ அல்லது சேதப்படுத்துவதோ தொல்பொருள் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் பிணையில் வரமுடியாத குற்றமாகும். இதற்கு முன்பும் ஓட்டமாவடியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் இவ்வாறான சம்பவத்தில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துரையிடுக

 
Top