(திருமலை ஏ எல் ரபாய்தீன் )
நகர அபிவிருத்தி அதிகார சபையின் திருகோணமலை அலுவலகத்தினால் கடற்கரை  பூங்கா ஒன்று நிர்மாணிக்கப்பட உள்ளது. கோணேசர் ஆலய வீதியில் உயர்ந்தபாடு கடற்கரைப்பகுதியில் இது அமையப் பெற உள்ளது. இதற்கான  அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த மாதம்  30.09.2014 காலை 8.30 மணிக்கு நடைபெற்றது. 
நகர அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் நா.இராஜநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே இதற்கான அடிக்கல்லினை நட்டி  வைத்தார். 

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா  இதற்கான காணியினை பட்டணமும் சூழலும் பிரதேச  செயலாளர் சசிதேவி ஜலதீபன் ஊடாக ஒதுக்கிடு செய்து கொடுத்துள்ளார். சங்கமித்தை யாத்திரீகர் விடுதிக்கு ஈடத்ததாக இது அமையப் பெற உள்ளது. 


கருத்துரையிடுக

 
Top