ஏ.பி.எம்.அஸ்ஹர்


இலங்கையில் நாடு பூராகவும் மேசைப்பந்து விளையாட்டினை அபிவிருத்தி செய்ய சீன அரசாங்கம் முன் வந்துள்ளது. இதன் முதற்கட்டமாக 25 மாவட்டங்களிலுமுள்ள பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 250லட்சம் ரூபா பெறுமதியான 150 மேசைப்பந்து மேசைகள் சீன அரசினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ் சீன அரசிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து இவை வழங்கப்பட்டுள்ளன.இத்திட்டத்தின் மூலம் விளையாட்டு உபகரணங்கள்,பயிற்றுவிப்பாளர்கள் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.அத்துடன் இவ்விளையாட்டுக்குத்தேவையான மனித மற்றும் பௌதீக வளங்களையும் வழங்க சீன அரசு முன்வந்துள்ளது.இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கடந்த 02ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.இதில் ஸ்ரீ  லங்கா மேசைப்பந்து சங்கத்தின் தலைவரும்  பிரதியமைச்சருமான லஸந்த அழகியவண்ணவும் சீன அரசாங்கத்தின் பிரதிநிதியும் கைச்சாத்திட்டனர்.

 ஸ்ரீ   லங்கா மேசைப்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில்கடந்த 02 ஆம் திகதிதிகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடாத்தப்பட்ட 68 ஆவதுதேசிய மேசைப்பந்து விளையாட்டுப்போட்டி நிகழ்வுகளின் போது சீன அரசாங்கத்தின் துாதுவர் வூ.ஜியன்கோ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ்விடம் இவற்றை வழங்கி வைத்தார்.அத்துடன் கனிஷ்ட மேசைப்பந்து போட்டிகளில் வெற்றியீட்டிய மற்றும் அண்மையில் தென் கொரியாவில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற பொது நலவாய விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு இலங்கைக்கு புகழைத்தேடித்தந்த வீரர்கள்அமைச்சரால் இங்கு பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில்   ஸ்ரீ   லங்கா மேசைப்பந்து சங்கத்தின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனக ஹேரத் மற்றும் விளையாட்டுப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் ரன்ஜித் ஜயகொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top