எம்.ரீ .எம்.பாரீஸ்
மட்டக்களப்பு கல்குடா அல்-கிம்மா நிறுவனம் பதுளை மாவட்டத்தின் கொஸ்லந்தையில் இயற்கை அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொண்டது.
அதன் முதற்கட்டமாக பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவித்து வரும் பதுளை மாவட்ட மக்களை நேரில் கண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகவும்,அம்மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்காவும் அல்-கிம்மா நிறுவனம் நேற்று காலை 6.00மணிக்கு பதுளை நோக்கி பயணித்தது.
இன ஐக்கியத்தையும் தமிழ்,முஸ்லிம் மற்றும் பல தரப்பட்ட சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் மேம்படுத்தும் நோக்கில் இம் மனித நேயப்பணிகள்  நிறுவனத்தினால்  முன்னொடுக்கப்பட்டது.

நிறுவனத்தின் பணிப்பாளர்  அஷ்ஷெய்க் மௌலவி ஹாறூன்(ஸஹ்வி) அவர்களின் தலைமையின் கீழ் இயற்கை விடுக்கும் அபாயகரமான சூழ் நிலைகளுக்கும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே இப் பயணம் தொடரப்பட்டது.  மழையூம் பணி மூட்டமும் வீதியோரங்களில் சரித்து விழுந்து கிடந்த மணல் மேடுகளும் எமது பயணத்தை தடை செய்து  பயமுறுத்திய போதும் சளைத்து  விடாது தியாக உணர்வுடன் பயணம்  மேற்கொள்ளப்பட்டது.

வல்ல இறைவனின் உதவியோடு பதுளை பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு அல்-கிம்மா நிறுவனத்தின் உதவிக்கரம் சென்றடைத்து.
ஏக்கத்துடனும் சோகத்துடனும் கவலை நிறைந்த முகங்களுடனும் அங்கு தஞ்சம் புகுத்திருத்த அம் மக்களின் சோகத்தில் நாமும் பங்கெடுத்து கொண்டோம் 

இப் பயணத்தின் போது நிறுவனத்தின்  பிரதிப்பணிப்பாளர்  எச்.எம்.ஜாபிர் ,இநிறுவனத்தின் செயலாளா றிஸ்வின், ஓட்டமாவடி வர்தக சங்க தலைவர்  எம்.ஏ.சீ.நியாஸ்(ஹாஜி) மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் தலைவர்  வீ.கமலதாஸ்,மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்  சம்மேளனத்தின் செயலாளர் , ஊடகவியலாளர் எம்.ரீ .எம்.பாரீஸ்,நிறுவனத்தின்  தொண்டர்கள் உள்ளிட்ட குழுவினர் இப்பயணத்தின் போது பங்கொடுத்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top