மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சேவையாற்றும் தெரிவு  செய்யப்பட்ட 30 அதிபர்களுக்கான இரண்டு நாள் உளவியல் உளவளத்துணை செயலமர்வு  அண்மையில் சத்துருக்கொண்டான் எஸ்கோ பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. எஸ்கோ நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் இணைந்து இச்செயலமர்வை ஏற்பாடுசெய்திருந்ததுடன் இலங்கையின் புகழ் பெற்ற மனநல மருத்துவர்களில் ஒருவாரன மன நல மருத்துவ நிபுணர்  எஸ்.சிவதாஸ் செயலமர்வில் வளவாளராக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
குடும்ப வாழ்க்கையை எவ்வாறு மகிழ்ச்சிகரமானதாக அமைத்துக்கொள்ளலாம் பாடசாலையில் பிள்ளை நேய பாடசாலை அணுகுமுறைகளை எவ்வாறு  செயற்படுத்தலாம் என்பது தொடர்பான கருப்பொருட்கள் கலந்துரையாடப்பட்டது.
செயலமர்வின் நிறைவு  நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர்  கே.பாஸ்கரன் சிறப்பு அதிதியாக எஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளா; திரு.எஸ்.ஸ்பிரித்தியோன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
அந்நிகழ்வில் மன நல மருத்துவ நிபுணர்  எஸ்.சிவதாஸ் அவர்களுக்கும் எஸ்.ஸ்பிரித்தியோன் ஆகியோரின்  அர்ப்பணிப்புடனான சேவையினை பாராட்டி மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர்  கே.பாஸ்கரனினால் பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கியதுடன் அதிபர்களினால் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.கருத்துரையிடுக

 
Top