கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழத்தின் ஏற்பாட்டில் கடந்த 2014.09.28 அன்று இறையடி சேர்ந்த மர்ஹும் கலாபூசணம் கரவாகான் எம்.எம். காசிம் ஜீ அவர்களின் நினைவுக் கூட்டம் கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் இன்று  2014.11.07 பி.ப. 3.30 மணிக்கு இடம் பெற்றது .


கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் தலைமையில் இடம் பெற்ற  இந்நினைவுக் கூட்டத்தில் ஓய்வுநிலை அதிபர் எம்.எம்.எச். அப்துல் காதர், மர்ஹும் கலாபூசணம் கரவாகான் எம்.எம். காசிம் ஜீ அவர்களின் புதல்வர் அஜ்மீர் , ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா, ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி சட்டத்தரணி எம்.சீ. ஆதம்பாவா ,அனைத்து  மத சம்மேளன தலைவர் டாக்டர் எம்.எம்.ஜெமீல்  மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் ஆகியோர் நினைவு பேருரயாற்றினர். மௌலவி ஆசிக் அலி அவர்களினால் துஆ பிரார்த்தனை நிகழ்த்தப் பட்டது .

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய கரவாகான் கலா பூசணம்  எம்.எம்.காசீம் ஜீ  அவர்கள் ஓர் அறிமுகம் என்ற நூல் வெளியிட்டு வைக்கப் பட்டது அதன் பிரதியை கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் விடம் இருந்து ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி சட்டத்தரணி எம்.சீ. ஆதம்பாவா பெற்றுக் கொண்டார் .நிகழ்வில் பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர் .கருத்துரையிடுக

 
Top