அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதியில் கடந்த சில தினங்களாக கடல் மீன் பிடி அமோகமாக இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக கரைவலை, மாயவலை, தோணி வலை கடல் மீன் பிடியாளர்களுக்கு மீன்பிடி அமோகமாக இடம் பெற்றுவருவதால் கடற்றொழிலாளர்கள் புதிய ஆர்வத்துடன் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.
 மேலும் கீரி இன மீன் அதிகம் பிடிபடுவதால்  ஊரெல்லாம் பொரியல்  வாசம் வீசுகின்றது 
. இன்று செவ்வாய்க்கிழமை நிந்தவூர், சாய்ந்தமருது ,கல்முனை  பிரதேசத்தில் கரைவலை மீன்பிடியாளர்களுக்கு பல லட்சம் ரூபா பெறுமதியான கீரிமீன்கள் பிடிபட்டன. ஒரு கிலோ கீரி  மீன் 100 தொடக்கம் 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப் படுகின்றது .

கருத்துரையிடுக

 
Top