2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு, 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றபோது. அதற்கு  ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 57 வாக்குகளும் கிடைத்துள்ளன.

அதன்படி இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வரவு-செலவுத்திட்ட வாசிப்பின் மீதான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சி பங்கேற்கவில்லை. அக்கட்சி வாக்கெடுப்பைப் புறக்கணித்திருந்தது.ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட முஸ்லிம் கட்சிகள் ஆதரவாக வாக்களித்துள்ளன வரவு செலவுத்திட்ட உரையின் இறுதி வாக்கெடுப்பிலும்  வெற்றி வாய்ப்பு தொடர்பான நம்பிக்கை அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

 
Top