கல்முனை நற்பிட்டிமுனை கரவாகு மேற்கு முச்சக்கர வண்டிகள் சங்கத்திலுள்ள முச்சக்கர வண்டிகளுக்கு அமைப்பின் பெயர் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் பொறிக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (6) நற்பிட்டிமுனை அல்-அக்ஸா  மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கரவாகு மேற்கு முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் தலைவர் ஐ.தன்ஸீல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.ஐ.சிங்கநாயக்க, போக்குவரத்து பொலிஸ் எஸ்.கலைவாணன், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எச்.எச்.நபார், சீஎம்.முபீத், நற்பிட்டிமுனை அனைத்து பள்ளிவாசல் தலைவரும் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி விரிவுரையாளருமான அஷ்ஸெய்க் ஏ.எல்.நாஸர்கனி, அல்-அக்ஸா  மகா வித்தியாலய அதிபர் எம்.எல்.ஏ.கையூம் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்துகொண்டு முச்சக்கர வண்டிகளுக்கான ஸ்டிக்கரை பொறித்தனர்.

இந்நிகழ்வில் 40ற்கு மேற்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

 
Top